Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 29 ஜூலை (ஹி.ச.)
சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அதிமுக நிர்வாகிகளுடன், அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிச்சாமி தனித்தனியாக ஆலோசனை நடத்தினார்.
இதில் தொகுதி அமைப்பு பணிகள், கட்சி வலுப்படுத்தும் நடவடிக்கைகள் மற்றும் அரசியல் நிலவரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிச்சாமியிடம், கர்நாடகாவின் மேகதாது அணைத் திட்டம் தொடர்பாகவும், தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் தனியாருக்கு விடப்பட உள்ளதாக வெளியாகும் தகவல்கள் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர்,
மேகதாது விவகாரம் குறித்து ஏற்கனவே விரிவான அறிக்கை வெளியிட்டுள்ளதாகவும் அந்த நிலைப்பாட்டில் எள்ளளவு மாற்றம் இல்லை எனவும் தெரிவித்தார்.
மேலும், டாஸ்மாக் கடைகளை தனியாருக்கு விடுவது தொடர்பான விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் விரிவாக பேசுவேன்
என்றும் தெரிவித்தார்.
Hindusthan Samachar / GOKILA arumugam