Enter your Email Address to subscribe to our newsletters

ஈரோடு, 29 ஜூலை (ஹி.ச)
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு 03.08.2026 திங்கட்கிழமை அன்று உள்ளூர் விடுமுறை என்று ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி அறிவித்து உள்ளார்.
ஈரோடு மாவட்டம், சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாளான ஆடித்திங்கள் 18-ஆம் நாள் (03.08.2026) திங்கட்கிழமை அன்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.
கல்லூரி / பள்ளிகளில் தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தால், இந்த விடுமுறை அறிவிப்பு பொருந்தாது எனவும், தேர்வுகள் முன்கூட்டி அறிவித்தபடி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் 22.08.2026 சனிக்கிழமை அன்று பணி நாளாக அறிவிக்கப்படுகிறது மாவட்ட ஆட்சியர் செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN