Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 29 ஜூலை (ஹி.ச.)
மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 2027-ஐ வெற்றிகரமாக நடத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என பல்வேறு தரப்பினரும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், இசையமைப்பாளர் இளையராஜா, தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் முழு ஈடுபாட்டுடன் பங்கேற்க வேண்டும் என்று தனது எக்ஸ் தளத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து எக்ஸ் தளத்தில் இன்று அவர் கூறியிருப்பதாவது,
இசை மனிதர்களை ஒன்றிணைப்பதைப் போல, மக்கள் தொகைக் கணக்கெடுப்பும் நாட்டின் முன்னேற்றத்திற்கு உறுதியான அடித்தளத்தை அமைக்கிறது.
மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 2027-இல் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
சுயக் கணக்கெடுப்பு (Self-Enumeration) 17.07.2026 முதல் 31.07.2026 வரை நடைபெறுகிறது.
இந்தக் காலப்பகுதியில் https://se.census.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் தங்களது குடும்ப விவரங்களை சுயமாக பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அதனைத் தொடர்ந்து 01.08.2026 முதல் 30.08.2026 வரை நடைபெறும் வீட்டுப் பட்டியலிடல் (HLO) கட்டத்தில் வருகை தரும் கணக்கெடுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
துல்லியமான மக்கள்தொகைத் தகவல்கள் நாட்டின் சிறந்த திட்டமிடல் மற்றும் வளர்சிக்கு அடிப்படையாக அமைகின்றன.
அனைவரும் இணைந்து மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 2027-ஐ வெற்றிகரமாக நடத்துவோம்
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b