மீண்டும் அதிரடியாக குறைந்தது தங்கம் விலை!!
சென்னை, 29 ஜூலை (ஹி.ச.) ஜூலை மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் நேற்றைய நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.155 குறைந்து ஒரு கிராம் ரூ.13,215க்கும், சவரனுக்கு ரூ.1,240 குறைந்து ஒரு சவரன் ரூ
தங்கம்


சென்னை, 29 ஜூலை (ஹி.ச.)

ஜூலை மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் நேற்றைய நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.155 குறைந்து ஒரு கிராம் ரூ.13,215க்கும், சவரனுக்கு ரூ.1,240 குறைந்து ஒரு சவரன் ரூ.1,05,720க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தொடர்ந்து இன்றும் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளதால் நகை பிரியர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அதன் படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ.13,155க்கும், சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ.1,05,240க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ.10,970க்கும், சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ.87,760க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை மட்டும் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ. 235க்கும், ஒரு கிலோ ரூ.2,35,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P