Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி , 29 ஜூலை (ஹி.ச.)
இந்திய கிரிக்கெட் அணியின் உதவி பயிற்சியாளராக கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றி வந்த ரையான் டென் டோஷ்காட்டே மற்றும் பீல்டிங் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த டி. திலிப் ஆகியோரின் ஒப்பந்த காலம் கடந்த ஜூன் மாதத்துடன் நிறைவடைந்தது.
இருப்பினும், அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான தொடர்களில் அவர்கள் அணியுடன் தொடர்ந்து பணியாற்றினர்.
இந்த நிலையில், இருவரின் ஒப்பந்தத்தையும் இந்திய கிரிக்கெட் வாரியம் (BCCI) நீட்டிக்காததால், அவர்களுக்கு பதிலாக புதிய உதவி பயிற்சியாளர்களை நியமிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக, புதிய பீல்டிங் பயிற்சியாளர் பதவிக்காக 2 முதல் 3 பேருடன் வாரியம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் தேவஜித் சைக்கியா கூறுகையில், ரையான் டென் டோஷ்காட்டே மற்றும் டி. திலிப் ஆகியோரின் ஒப்பந்த காலம் நிறைவடைந்திருந்தாலும், இங்கிலாந்து தொடர் முடியும் வரை அவர்கள் அணியுடன் இருந்தனர்.
அவர்களது ஒப்பந்தத்தை வாரியம் புதுப்பிக்கவில்லை. எனவே, இது ராஜினாமா தொடர்பான விவகாரம் அல்ல. ஒப்பந்த காலம் முடிவடைந்ததன் காரணமாகவே அவர்கள் பதவியில் இருந்து விலகியுள்ளனர் என்று விளக்கம் அளித்தார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA