கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை
கரூர், 29 ஜூலை (ஹி.ச.) கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று அதிகாலை முதல் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். லஞ்ச ஒழிப்புத் துறை அதிகார
லஞ்ச ஒழிப்புத் துறை


கரூர், 29 ஜூலை (ஹி.ச.)

கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று அதிகாலை முதல் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள், காவல்துறையினர் பாதுகாப்புடன் சோதனை நடத்தி வருவதுடன், ஆவணங்கள், கணினி பதிவுகள் மற்றும் முக்கிய ஆவணங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

குறிப்பாக கரூர் கோதை நகர் பகுதியில் உள்ள கார்த்திக் என்பவரின் வீட்டில் அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சோதனை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அதன் முடிவில் கூடுதல் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / GOKILA arumugam