அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று பாமக பொதுக்குழு கூட்டம்
சென்னை, 29 ஜூலை (ஹி.ச.) பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று காலை 11 மணிக்கு மாமல்லபுரத்தில் பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெறுகிறது. பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சமீபத்தில் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக
PMK General Council meeting held today


சென்னை, 29 ஜூலை (ஹி.ச.)

பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று காலை 11 மணிக்கு மாமல்லபுரத்தில் பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெறுகிறது.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சமீபத்தில் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததுடன், கட்சியின் எதிர்காலத்தை தனது மகனும், கட்சித் தலைவருமான அன்புமணி ராமதாஸ் வழிநடத்துவார் என தெரிவித்திருந்தார்.

இந்த அறிவிப்புக்கு பிறகு நடைபெறும் முதல் பொதுக்குழு கூட்டம் என்பதால் இந்த கூட்டத்திற்கு கூடுதல் முக்கியத்துவம் ஏற்பட்டுள்ளது.

இந்த பொதுக்குழு கூட்டத்தில் மாநிலம் முழுவதிலும் இருந்து பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.

கூட்டத்தில் கட்சியின் எதிர்கால திட்டங்கள், வரவிருக்கும் சட்டமன்ற தேர்தல் தொடர்பான வியூகங்கள், கூட்டணி குறித்த நிலைப்பாடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2025 ஆகஸ்ட் பொதுக்குழுவில் அன்புமணியின் தலைவர் பதவி ஓராண்டு காலத்திற்கு நீட்டிக்கப்பட்டது.

அந்த பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடையும் நிலையில், இந்த பொதுக்குழுவில் மீண்டும் அடுத்த 3 ஆண்டுகளுக்கு பாமகவின் தலைவராக அன்புமணி ராமதாஸ் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக அக்கட்சி வட்டார தகவல்கள் கூறுகின்றன.

Hindusthan Samachar / vidya.b