Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 29 ஜூலை (ஹி.ச.)
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் போலி ஆவணங்கள் மூலம் சட்டவிரோதமாக பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில், சிபிசிஐடி போலீசார் 4 பேரை கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளாகக் கருதப்படும் நில வாங்கியவர்கள், இடைத்தரகர்கள் மற்றும் ஆவணப் பதிவுக்கு தொடர்புடைய நபர்களிடம் விசாரணை நடத்திய சிபிசிஐடி அதிகாரிகள், அவர்களை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நில மோசடி தொடர்பாக ஏற்கனவே பல்வேறு இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டுள்ள நிலையில், பதிவு ஆவணங்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பங்கு உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், சிபிசிஐடி விசாரணையை விரிவுபடுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam