Enter your Email Address to subscribe to our newsletters

ஜப்பான், 29 ஜூலை (ஹி.ச.)
ஜப்பானில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது .
ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் ஜப்பானின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள கியூஷூ தீவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தின் அதிர்வு காரணமாக கியூஷூ பகுதியில் செயல்பட்டு வந்த பிரபல ஷாப்பிங் மால் ஒன்று முற்றிலுமாக இடிந்து விழுந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த கோர விபத்தில் சிக்கி இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என கூறப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள மீட்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை பத்திரமாக மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
நிலநடுக்கத்தை தொடர்ந்து அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அப்பகுதியில் உள்ள பல இடங்களில் கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b