Enter your Email Address to subscribe to our newsletters

ராமநாதபுரம், 29 ஜூலை (ஹி.ச.)
ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசும் என்றும் காற்றின் வேகம் மணிக்கு 45 கிலோமீட்டர் முதல் 55 கிலோமீட்டர் வரையிலும் அதிகபட்சமாக 65 கிலோமீட்டர் வரையிலும் வீசக்கூடும் என்பதால் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மண்டபம் தொண்டி பகுதிகளில் விசைப்படகுகளுக்கு இன்று மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கப்பட மாட்டாது என்று மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
அதேபோல நாட்டுப் படகு மீனவர்களும் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாததால் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும் ஏராளமான நாட்டுப்படகுகளும் கரையிலேயே நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன.
இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகம் ஆள் ஆரவாரமின்றி காணப்படுகிறது
Hindusthan Samachar / ANANDHAN