ஆற்காடு அருகே பட்டப்பகலில் தந்தை, மகன் மீது சரமாரி கத்திக்குத்து- போலீசார் விசாரணை
ராணிப்பேட்டை, 29 ஜூலை (ஹி.ச.) ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த நாகமுத்து மற்றும் அவரது மகன் மணி ஆகியோர் ஆற்காடு பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனங்களுக்கான செகண்ட் சேல்ஸ் கடை நடத்தி வருகின்றனர். இன்று வழக்கம்போல்
தாக்குதல்


ராணிப்பேட்டை, 29 ஜூலை (ஹி.ச.)

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த நாகமுத்து மற்றும் அவரது மகன் மணி ஆகியோர் ஆற்காடு பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனங்களுக்கான செகண்ட் சேல்ஸ் கடை நடத்தி வருகின்றனர்.

இன்று வழக்கம்போல் இருவரும் கடையில் இருந்தபோது, முன்விரோதம் காரணமாக கார்த்தி என்பவர் அங்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

வாக்குவாதம் முற்றிய நிலையில், தனது இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்த கார்த்தி, நாகமுத்து மற்றும் மணி ஆகியோரை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. தாக்குதலில் காயமடைந்த மணி உயிர் தப்பிக்க ஓடியபோதும், அவரை விரட்டிச் சென்று மீண்டும் தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரத்த வெள்ளத்தில் காயமடைந்த மணியை அப்பகுதி மக்கள் மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். நாகமுத்துவும் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவம் தொடர்பாக ஆற்காடு நகர காவல்துறையினர் கார்த்தியை கைது செய்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டப்பகலில் நடைபெற்ற இந்த கொடூர தாக்குதல் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

Hindusthan Samachar / GOKILA arumugam