Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 29 ஜூலை (ஹி.ச.)
டாஸ்மாக் கொள்முதல் மற்றும் விநியோகத்தில் முறைகேடு தொடர்பாக தமிழகம் முழுவதும் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை இன்று காலை முதல் நடைபெற்று வருகின்றது.
அந்த வகையில் கோவை மாவட்டம் பீளமேடு கிடங்கிற்கு இன்று காலை சுமார் 8 மணியளவில் வந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர், கிடங்கின் உள்ளே ஆய்வு மற்றும் விசாரணையை தொடங்கினர். இந்த சோதனை தற்போது வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதேபோன்று, இந்த விவகாரம் தொடர்பாக பொள்ளாச்சி, நரசிம்மநாயக்கன்பாளையம் மற்றும் நவக்கரை ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் மதுபான ஆலைகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
டாஸ்மாக் கொள்முதல் மற்றும் விநியோகத்தில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையிலேயே இந்த சோதனை நடைபெற்று வருவதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சோதனையின் முடிவில் கணக்கில் வராத ஆவணங்கள் அல்லது பணம் ஏதேனும் சிக்கியதா என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b