சிவகங்கை டாஸ்மாக் குடோனில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை - ராமநாதபுரம் டிஎஸ்பி தலைமையில் தீவிர விசாரணை
சிவகங்கை, 29 ஜூலை (ஹி.ச.) டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்ற முறைகேடுகள் மற்றும் ரூ. 3,600 கோடி வருவாய் இழப்பு தொடர்பாகத் தமிழகம் முழுவதும் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் சிவகங்கையில் லஞ
சிவகங்கை டாஸ்மாக் குடோனில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை - ராமநாதபுரம் டிஎஸ்பி தலைமையில் தீவிர விசாரணை


சிவகங்கை, 29 ஜூலை (ஹி.ச.)

டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்ற முறைகேடுகள் மற்றும் ரூ. 3,600 கோடி வருவாய் இழப்பு தொடர்பாகத் தமிழகம் முழுவதும் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில்

சிவகங்கையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சிவகங்கை - தொண்டி சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபானக் கிடங்கில் இன்று காலை முதல் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் தலைமையிலான குழுவினர் இந்த சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.

டாஸ்மாக் குடோனில் மதுபான இருப்பு, விற்பனை கணக்கு வழக்குகள், பராமரிப்பு பதிவேடுகள் உள்ளிட்ட ஆவணங்களை அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், குடோனில் பணியாற்றும் ஊழியர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் தொடர்பான புகார்களை அடுத்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வரும் நிலையில், சிவகங்கையிலும் இந்த சோதனை நடைபெறுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b