விருதுநகர் மாவட்ட இளைஞர் அணி இணை செயலாளர் சரவணகுமார் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கம்
விருதுநகர், 29 ஜூலை (ஹி.ச.) விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே 21 பவுன் நகை கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் விருதுநகர் மாவட்ட இளைஞர் அணி இணை செயலாளர் சரவணகுமார் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
Youthwing


விருதுநகர், 29 ஜூலை (ஹி.ச.)

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே 21 பவுன் நகை கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் விருதுநகர் மாவட்ட இளைஞர் அணி இணை செயலாளர் சரவணகுமார் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் அவரை நீக்கி விருதுநகர் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் எஸ்.பி. செல்வம் எம்.எல்.ஏ. உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியான அறிக்கையில்,

கட்சியின் ஒழுங்கு, கட்டுப்பாடு மற்றும் நலனுக்கு முரணான செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டதாக பெறப்பட்ட தகவல்கள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் பரிந்துரையின் அடிப்படையில், திரு. M.சரவணகுமார், மாவட்ட இளைஞர் அணி இணை அமைப்பாளர், அவர்களை இன்றைய தேதி முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் உடனடியாக நீக்கப்படுகிறார்.

எனவே, இன்றுமுதல் அவர் தமிழக வெற்றிக் கழகத்தின் பெயரிலோ, கொடியையோ, சின்னத்தையோ அல்லது கட்சியின் எந்தவொரு பொறுப்பையும் பயன்படுத்தி செயல்படக் கூடாது. கட்சியின் எந்த நிகழ்வுகளிலும் அல்லது அமைப்பு நடவடிக்கைகளிலும் அவருக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்பதை அனைவரும் அறிந்து செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வுத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN