Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 29 ஜூலை (ஹி.ச)
சென்னையை செய்யாறு சிப்காட் தொழிற்பூங்காவுடன் இணைக்கும் வகையில் 43 கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிய சாலை அமைப்பதற்காக தி.மு.க. ஆட்சிக் காலத்தில் விடப்பட்ட டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தொழில் வளர்ச்சி மற்றும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில் இந்த முக்கிய சாலைத் திட்டத்திற்கான டெண்டர் கோரப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த டெண்டர் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. முறையான விதிமுறைகளை முழுமையாக பின்பற்றுவதும், அரசுக்கு ஏற்படும் செலவினங்களை கணிசமாகக் குறைப்பதும் என்ற நோக்கில் இந்த மறு ஆய்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விதிகளின்படி அனைத்து நடைமுறைகளும் சரியாக பின்பற்றப்பட்டுள்ளதா, திட்ட மதிப்பீடு மற்றும் செலவு குறித்த விவரங்கள் உரிய முறையில் உள்ளதா என்பது குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்ட பின்னரே டெண்டரை ரத்து செய்ய முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த அறிவிப்பை தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள் ஆணையகம் பிறப்பித்துள்ளது.
இதன் மூலம் பொது நிதி வீணாவது தடுக்கப்பட்டு, மிகக் குறைந்த செலவில் தரமான சாலையை அமைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரத்து செய்யப்பட்டுள்ள டெண்டர் விரைவில் புதிய விதிமுறைகளுடன், திருத்திய மதிப்பீட்டில் மீண்டும் கோரப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b