மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை - குற்றால அருவிகளில் அதிகரித்து வரும் தண்ணீர்
தென்காசி, 29 ஜூலை (ஹி.ச.) தென்காசி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி உள்ள பகுதிகளில் நேற்று இரவு முதல் லேசான சாரல் மழை பொழிந்து வரும் நிலையில், இந்த மழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் உள்ள பல்வேறு நீரோடைகள் மற்றும் நீர்
Courtallam Falls


தென்காசி, 29 ஜூலை (ஹி.ச.)

தென்காசி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி உள்ள பகுதிகளில் நேற்று இரவு முதல் லேசான சாரல் மழை பொழிந்து வரும் நிலையில், இந்த மழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் உள்ள பல்வேறு நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளுக்கு தண்ணீர் வரத்து சற்று அதிகரித்து காணப்பட்டு வருகிறது.

அந்த வகையில், தற்போது குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலுமே தண்ணீர் வரத்து சற்று அதிகரித்து காணப்பட்டு வரும் நிலையில், சீராக கொட்டி வரும் தண்ணீரில் ஆனந்த குளியல் போடுவதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

குறிப்பாக, குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தற்போது தண்ணீரானது சீராக கொட்டி வரும் நிலையில் சீராக கொட்டி வரும் தண்ணீரில் ஆனந்த குளியல் போடுவதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருவதால் மெல்லிய சாரலுடன் குற்றால சீசன் ஆனது களைகட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / ANANDHAN