Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 29 ஜூலை (ஹி.ச.)
தென்காசி மாவட்டத்தின் முக்கிய பொருளாதார ஆதாரமாக விளங்கக்கூடிய விவசாயமானது தற்போது பெரிய அளவிலான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
குறிப்பாக, தென்மேற்கு பருவமழையானது தென்காசி மாவட்டத்தில் சரிவர பெய்யாத காரணத்தினால், ஏராளமான பகுதிகளில் தற்போது கார் சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் உள்ள நிலையில், ஒரு சில இடங்களில் கார் சாகுபடி நடவுப் பணிகள் நடைபெற்ற இடங்களிலும் தண்ணீர் இன்றி விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
மேலும், விவசாயத்திற்கு ஆள் பற்றாக்குறை மற்றும் உர விலை உயர்வு, உரத் தட்டுப்பாடு உள்ளிட்டவைகளும் நிலவிவரும் நிலையில், விவசாயத்தில் லாபம் இல்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மேலும், இது போன்ற காரணங்களால் விவசாயம் செய்ய முடியாத சூழலுக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ள நிலையில், அரசும் தங்களை பல்வேறு அறிவிப்புகளை அறிவித்து ஏமாற்றி விட்டதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, முழுமையான பயிர் கடன் தள்ளுபடி எனக் கூறிவிட்டு பல்வேறு நிபந்தனைகள் விதிப்பது எந்த விதத்தில் நியாயம் எனவும், அரசை நம்பி கடன் வாங்கிய தாங்கள் தற்போது கடன் சுமையில் தள்ளப்பட்டுள்ளதாகவும், விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகளை அரசு வழங்கினால் மட்டுமே விவசாயம் செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டுவார்கள் எனவும் இல்லை எனில் லாபம் இல்லை என்பதால் விவசாயமே அழிந்து போகும் சூழலுக்கு தள்ளப்படும் எனவும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ள நிலையில், இதனை கருத்தில் கொண்டு அரசு விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், தென்காசி மாவட்டத்தில் தற்போது தண்ணீர் பற்றாக்குறை நிலவி வந்தாலும் விவசாயத்தை விட்டு விடக்கூடாது என்பதற்காக ஒரு சில விவசாயிகள் தற்போது கார் சாகுபடி நடவு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / ANANDHAN