களப் போராளிகளை விட இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போராளிகளையே சமூகம் கொண்டாடுகிறது – உதயநிதி ஸ்டாலின்
சென்னை, 29 ஜூலை (ஹி.ச.) உதவும் கைகள் அறக்கட்டளை மற்றும் திணை நிலவாசிகள் சார்பில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் உருவச்சிலை திறப்பு மற்றும் அம்மாச்சி கற்பனையின் முதல் ஆசிரியர் நூல் வெளியீட்டு விழா சென்னை பழைய வண்ணாரப்பேட
உதயநிதி


சென்னை, 29 ஜூலை (ஹி.ச.)

உதவும் கைகள் அறக்கட்டளை மற்றும் திணை நிலவாசிகள் சார்பில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் உருவச்சிலை திறப்பு மற்றும் அம்மாச்சி கற்பனையின் முதல் ஆசிரியர் நூல் வெளியீட்டு விழா சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்று நல்லகண்ணுவின் உருவச்சிலையை திறந்து வைத்து, நூலை வெளியிட்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், இன்றைய சமூகம் களப் போராளிகளை விட இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போராளிகளையே அதிகம் கொண்டாடுகிறது என்றார்.

மேலும், நீட் எதிர்ப்பு போராட்டம் தமிழகத்திற்கு புதிதல்ல. நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திமுக பல்வேறு போராட்டங்களை நடத்தியதுடன், 80 லட்சம் பேரின் கையெழுத்தையும் பெற்றது. தமிழ்நாட்டுக்கு எந்த பிரச்சினை வந்தாலும் திராவிட இயக்கமும், பொதுவுடமை இயக்கமும் எப்போதும் கை கோர்த்து நிற்கும். நல்லகண்ணு போன்ற போராட்ட வீரரின் சிலையை திறந்து வைப்பது வாழ்நாளில் கிடைத்த பெருமை என்றும் அவர் கூறினார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P