ஆவடி தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கிய உணவில் பல்லி விழுந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் – வானதி சீனிவாசன்
சென்னை, 29 ஜூலை (ஹி.ச.) ஆவடி மாநகராட்சி பருத்திப்பட்டு பசுமைப் பூங்காவில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட காலை உணவில் பல்லி விழுந்து கிடந்ததாகவும், அதை அறியாமல் சாப்பிட்ட பலருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகவும் வெளியாகிய
Vanathi Srimivasan


சென்னை, 29 ஜூலை (ஹி.ச.)

ஆவடி மாநகராட்சி பருத்திப்பட்டு பசுமைப் பூங்காவில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட காலை உணவில் பல்லி விழுந்து கிடந்ததாகவும், அதை அறியாமல் சாப்பிட்ட பலருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகவும் வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சி அளிப்பதாக பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்,

நகரைச் சுத்தமாக வைத்திருக்க தன்னலமின்றி பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு தரம் மற்றும் சுகாதாரம் பரிசோதிக்கப்படாத உணவு வழங்கி அவர்களின் உயிருடன் விளையாடுவது கடும் கண்டனத்திற்குரியது என்று விமர்சித்துள்ளார்.

மேலும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில், உணவின் தரத்தை முறையாகச் சோதனை செய்த பிறகே விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P