Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 29 ஜூலை (ஹி.ச.)
We The Leaders
(வீ. தி லீடர்ஸ்)என்ற சமூக மாற்ற இயக்கத்தைத் தொடங்கியுள்ள பா.ஜ.க. முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, அந்த இயக்கத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள 'We The Leaders' மொபைல் செயலியை இன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளார்.
இந்த செயலி ஆண்ட்ராய்டு (Google Play Store) மற்றும் ஐபோன் (Apple App Store) ஆகிய இரு தளங்களிலும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
செயலியை எவ்வாறு பதிவிறக்கம் செய்து, அதில் பதிவு செய்து பயன்படுத்துவது என்பது குறித்து எளிமையான விளக்கக் காணொளியையும் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அண்ணாமலை தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பதிவில், We The Leaders செயலியை பதிவிறக்கம் செய்து, எவ்வாறு பயன்படுத்துவது என்பதை இந்தக் காணொளியில் எளிமையாக விளக்கியுள்ளோம்.
இதனைப் பார்த்து செயலியை பதிவிறக்கம் செய்து, உங்கள் பகுதியில் மாற்றத்தை உருவாக்கும் பயணத்தில் நீங்களும் இணைந்திடுங்கள். சமூக மாற்றத்திற்கான தலைமைப் பயணத்தை இன்று தொடங்குங்கள்
என்று தெரிவித்துள்ளார்.
மேலும், சமூகத்தில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்த விரும்பும் இளைஞர்கள், பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் இந்தச் செயலியின் மூலம் ஒன்றிணைந்து செயல்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செயலியை பதிவிறக்கம் செய்வதற்கான இணைப்புகளையும் அவர் தனது பதிவில் பகிர்ந்துள்ளார். இதன்மூலம் நாடு முழுவதும் உள்ள பொதுமக்கள் எளிதாக செயலியைப் பதிவிறக்கம் செய்து இயக்கத்தில் இணையும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் பரவலாக கவனம் பெற்றுள்ள நிலையில், 'We The Leaders' இயக்கத்தின் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்தும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ