கொளத்தூர் தொகுதியில் 14 வாக்குச்சாவடிகளில் இ.வி.எம் எந்திரங்கள் சரிபார்க்கும் பணிகள் தொடக்கம்
சென்னை, 29 ஜூலை (ஹி.ச.) வாக்குப்பதிவு எந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து எழுந்த புகார்களைத் தொடர்ந்து, திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளில் உள்ள இவிஎம் எந்திரங்களை மறுபரிசோதனை செய்ய வேண்டும் என
கொளத்தூர் தொகுதியில் 14 வாக்குச்சாவடிகளில் இவிஎம் எந்திரங்கள் சரிபார்க்கும் பணிகள் தொடக்கம்


சென்னை, 29 ஜூலை (ஹி.ச.)

வாக்குப்பதிவு எந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து எழுந்த புகார்களைத் தொடர்ந்து, திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளில் உள்ள இவிஎம் எந்திரங்களை மறுபரிசோதனை செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட இந்திய தேர்தல் ஆணையம், இன்று சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 14 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்க்கும் பணியை இன்று மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது.

இதன்படி கொளத்தூர் தொகுதியில் தேர்வு செய்யப்பட்ட 14 வாக்குச்சாவடிகளில் உள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் விவிபாட் இயந்திரங்கள் ஆகியவை தற்போது தனித்தனியாக சோதனை செய்யப்படுகின்றன.

தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் குழுவினர் இந்த ஆய்வில் பங்கேற்றுள்ளனர்.

வாக்குப்பதிவின் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து தமிழக தேர்தல் அதிகாரி ஒருவர் கூறியதாவது,

பொதுவாகவே தேர்தல் முடிந்த பின்னர், தொகுதிகளில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தங்கள் தொகுதிக்குட்பட்ட குறிப்பிட்ட வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் குளறுபடிகள் ஏற்பட்டது குறித்தோ, வேறு ஏதாவது முக்கிய காரணங்களை குறிப்பிட்டு மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைப்பார்கள். அதை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டு முழுமையாக ஆய்வு செய்யும்.

அதன்படி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு பின்பு வந்துள்ள கோரிக்கை மனுக்கள் குறித்து ஆராயப்பட்டது. இதில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்துள்ள மனுவும் அடங்கும்.

கொளத்தூர் தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் எண்ணிக்கை முடிந்தவுடன் அவை 'சீல்' வைக்கப்பட்டு சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இன்று தி.மு.க. முகவர்கள், தேர்தல் நடத்தும் அதிகாரி முன்னிலையில் இந்த எந்திரங்கள் சரிபார்க்கப்படும்.

மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ள 14 வாக்குச்சாவடிகளில் பதிவான மின்னணு எந்திரங்கள் ஆய்வு செய்யப்படும். இன்று முதல் 7 நாட்களுக்கு இப்பணி நடைபெறும். ஒவ்வொரு நாளும் 2 வாக்குச்சாவடிகளுடைய எந்திரங்கள் ஆய்வு செய்யப்படும்.

இதேபோன்று புகார்கள் வந்துள்ள காஞ்சிபுரம், உத்திரமேரூர், செங்கல்பட்டு உள்ளிட்ட தொகுதிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு பணிகள் இன்று முதல் தொடங்கி நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Hindusthan Samachar / vidya.b