அண்ணா அறிவாலயத்தில் திமுக மறுசீரமைப்பு குழு ஆலோசனை - இன்று முதல் பணிகள் தொடக்கம்
சென்னை, 03 ஜூலை (ஹி.ச.) திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, கட்சியின் மறுசீரமைப்பு குழுவினர் இன்று முதல் தங்களது பணிகளைத் தொடங்கியுள்ளனர். இதன் ஒரு பகுதியாக, சென்னை அண்ணா அறிவாலயத்தில் குழுவின் முதற்கட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இத
Arivalayam


சென்னை, 03 ஜூலை (ஹி.ச.)

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, கட்சியின் மறுசீரமைப்பு குழுவினர் இன்று முதல் தங்களது பணிகளைத் தொடங்கியுள்ளனர். இதன் ஒரு பகுதியாக, சென்னை அண்ணா அறிவாலயத்தில் குழுவின் முதற்கட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதற்கு முன்பு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் குழுவினர் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

அப்போது, கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள், அவற்றை செயல்படுத்தும் முறை, எதிர்காலத்தை முன்னிறுத்திய வகையில் கட்சியின் மறுகட்டமைப்பு அமைய வேண்டிய அவசியம் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை அவர் வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், தலைவர் வழங்கிய வழிகாட்டுதலின்படி இன்று முதல் பணிகளைத் தொடங்கிய மறுசீரமைப்பு குழுவினர், அண்ணா அறிவாலயத்தில் முதற்கட்ட ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இந்தக் கூட்டத்தில், குழுவின் செயல்திட்டம், பணிகளை முன்னெடுக்கும் நடைமுறை மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ