Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 03 ஜூலை (ஹி.ச)
சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடியை சேர்ந்தவர் அசாருதீன். இவர் ராமநாதபுரம் தமிழ்நாடு சிறப்பு காவல் படை 12 ஆம் பிரிவில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.
பத்தாண்டுகளுக்கு மேலாக காவல்துறையில் பணிபுரிந்து வரும் இவர், ராமநாதபுரம் பட்டாலியன் குடியிருப்பில் தனக்கு ஒதுக்கப்பட்ட வீட்டில் குடியிருந்து வந்தார்.
இன்று அதிகாலை விஷத்தன்மை உடைய பூச்சி மருந்தை சாப்பிட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
போலீசார் நடத்திய விசாரணையில் தன்னுடைய குடும்ப பிரச்சினை காரணமாக அவர் இதுபோல விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN