முதலமைச்சர் தொகுதியாக பெரம்பூர் தொகுதி மக்களுக்கான பிரத்யேக மொபைல் செயலி விரைவில் அறிமுகம்
சென்னை, 03 ஜூலை (ஹி.ச) பெரம்பூர் தொகுதி மக்களின் அடிப்படை தேவைகள், குறைகள் மற்றும் கோரிக்கைகளை விரைவாகப் பதிவு செய்து, அவற்றின் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளை நேரடியாக அறிந்துகொள்ளும் வகையில் பிரத்யேக மொபைல் செயலி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள
Pera


சென்னை, 03 ஜூலை (ஹி.ச)

பெரம்பூர் தொகுதி மக்களின் அடிப்படை தேவைகள், குறைகள் மற்றும் கோரிக்கைகளை விரைவாகப் பதிவு செய்து, அவற்றின் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளை நேரடியாக அறிந்துகொள்ளும் வகையில் பிரத்யேக மொபைல் செயலி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

தமிழக முதலமைச்சரும் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினருமான சி. ஜோசப் விஜய் அவர்களின் அறிவுறுத்தலின்படி உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலி, பெரம்பூர் தொகுதி மக்களின் குரலை நேரடியாக மக்களாட்சி நிர்வாகத்துடன் இணைக்கும் புதிய முயற்சியாகக் கூறப்படுகிறது.

இந்த செயலி மூலம், குடிநீர், சாலை, தெருவிளக்கு, கழிவுநீர் வடிகால், தூய்மை, மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகளை எளிதாக பதிவு செய்ய முடியும். மேலும், பதிவு செய்யப்பட்ட புகார்களின் தற்போதைய நிலை, அவற்றின் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் ஆகியவற்றையும் மக்கள் நேரடியாகக் கண்காணிக்கும் வசதி இடம்பெறவுள்ளது.

பெரம்பூர் தொகுதி மக்களின் குறைகளை விரைவாகக் கண்டறிந்து, அவற்றுக்கு துரிதமாக தீர்வு காணும் நோக்கில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களின் குரலை நேரடியாக நிர்வாகத்துடன் இணைத்து, வெளிப்படையான மற்றும் திறமையான சேவையை வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பிரத்யேக மொபைல் செயலி விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ