Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 03 ஜூலை (ஹி.ச.)
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்திற்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் தனக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி சி.வி. சண்முகம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய அவசியத்தை சி.வி. சண்முகம் போதுமான அளவில் நிரூபித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
இதையடுத்து, சி.வி. சண்முகத்திற்கு உடனடியாக ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க தமிழ்நாடு டிஜிபி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ