Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 03 ஜூலை (ஹி.ச)
திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருகே தந்தையும் அவரது 5 வயது மகனும் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் ஆழ்ந்த வேதனையையும் அளிப்பதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,
திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருகே தந்தையும் அவரது 5 வயது மகனும் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. சட்டம் - ஒழுங்கு முழுவதும் சீர்கெட்டுவிட்ட நிலையில், தமிழ்நாட்டில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு என்ற ஒன்றே இல்லாமல் ஆகிவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், முன்விரோதம் காரணமாகத் தொடரும் இந்தப் பிரச்சினையில் அரசு மெத்தனமாகச் செயல்படாமல், குற்றவாளிகளை விரைந்து கைது செய்து, அப்பகுதியில் அமைதி திரும்புவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ