Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 03 ஜூலை (ஹி.ச.)
சாலை விரிவாக்கம் மற்றும் சாலை மேம்படுத்தல் பணிகளில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக, லஞ்ச ஒழிப்புத்துறை அனுப்பிய சம்மனின் பேரில் இன்று விசாரணைக்கு ஆஜராகுவார் என எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ஏ.வ. வேலு, உடல்நலக் குறைவு காரணமாக ஆஜராகவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து, திங்கட்கிழமை அல்லது அதிகாரிகள் ஒதுக்கும் மற்றொரு நாளில் விசாரணைக்கு ஆஜராக அவகாசம் கோரப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக அவரது வழக்கறிஞர், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து புதிய தேதி கோர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, சாலை விரிவாக்கம் மற்றும் சாலை மேம்படுத்தல் திட்டங்களில் ஊழல் நடைபெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு ஏ.வ. வேலுவுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / P YUVARAJ