நீட் மறுதேர்வில் தவறான கேள்வி - அனைத்து மாணவர்களுக்கும் 4 மதிப்பெண் வழங்க தேசிய தேர்வு முகமை முடிவு
சென்னை, 03 ஜூலை (ஹி.ச.) நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்களை அடுத்து, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக ஜூன் 21 அன்று மறுதேர்வு நடத்தப்பட்டது. தற்போது அந்த மறுதேர்விலேயே கேள்விகள் தவறாக அமைந்திருப்பது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்த
Flawed question in NEET re-exam


சென்னை, 03 ஜூலை (ஹி.ச.)

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்களை அடுத்து, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக ஜூன் 21 அன்று மறுதேர்வு நடத்தப்பட்டது.

தற்போது அந்த மறுதேர்விலேயே கேள்விகள் தவறாக அமைந்திருப்பது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீட் மறுதேர்வில் ஒரு கேள்வி தவறாக இடம்பெற்றிருந்ததை தேசிய தேர்வு முகமை (NTA) அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளது.

இதனால் அந்த மறுதேர்வை எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் தலா 4 மதிப்பெண்கள் வழங்கப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

மேலும், வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ விடைக்குறிப்பில் மற்றொரு கேள்விக்கு இரண்டு விடைகள் சரியானவை என குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த கேள்வியில் இரண்டு சரியான விடைகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்த மாணவர்களுக்கும் 4 மதிப்பெண்கள் வழங்கப்படும் என தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

இந்த மதிப்பெண் மாற்றங்கள் இறுதி தரவரிசைப் பட்டியலில் பிரதிபலிக்கும் என்றும் NTA தெரிவித்துள்ளது.

இந்த 4 போனஸ் மதிப்பெண்களைப் பெற மாணவர்கள் தனியாக எந்தவொரு கோரிக்கையையும் சமர்ப்பிக்க வேண்டியதில்லை. தேர்வு முடிவுகள் தயார் செய்யப்படும் போதே இந்த மதிப்பெண்கள் தானாகவே கணக்கில் சேர்த்துக்கொள்ளப்படும் என கூறப்படுகின்றது.

நீட் மறுதேர்வுக்கான இறுதி விடைக்குறிப்பு மற்றும் தேர்வு முடிவுகள் ஜூலை 20-ஆம் தேதிக்குள் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாணவர்கள் தங்களின் அதிகாரப்பூர்வ முடிவுகளை

NTA NEET Official Website என்ற இணையதளத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம்

Hindusthan Samachar / vidya.b