Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 03 ஜூலை (ஹி.ச.)
ஹர்பஜன் சிங் (Harbhajan Singh) இந்தியாவின் மிகச்சிறந்த மற்றும் புகழ்பெற்ற முன்னாள் சர்வதேச கிரிக்கெட் வீரர் மற்றும் தற்போதைய அரசியல்வாதி ஆவார்.
பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் 1980 ஆம் ஆண்டு ஜூலை 3 இல் பிறந்த இவர், தனது சுழற்பந்து வீச்சால் இந்திய அணிக்கு பல வரலாற்று வெற்றிகளைப் பெற்றுத் தந்துள்ளார்.
கிரிக்கெட் ரசிகர்கள் இவரை அன்போடு பாஜி (Bhajji) என்றும் டர்பனேட்டர் (Turbanator) என்றும் அழைக்கிறார்கள்.
இவர் இந்திய அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் ஆகிய வடிவங்களில் இந்திய அணிக்காக விளையாடி உள்ளார்.
மேலும் இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவராக இருந்தார்.
ஆஸ்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான அந்தப் போட்டித்தொடரில் 32 இலக்குகள் வீழ்த்தி தொடரை வெல்ல காரணமாக அமைந்ததால் அணியில் நிரந்தர இடம் பிடித்தார்.
உலகக் கோப்பை வெற்றிகள்:
இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்ற 2007 டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 ஒருநாள் உலகக் கோப்பை தொடர்களில் முக்கியப் பங்கு வகித்தார்.
ஹாட்ரிக் சாதனை:
2001 இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான புகழ்பெற்ற கொல்கத்தா டெஸ்டில், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையைப் படைத்தார்.
சிறந்த ஆஃப்-ஸ்பின்னர்:
அனில் கும்ப்ளேயுடன் இணைந்து இந்தியாவின் பல உள்நாட்டு டெஸ்ட் வெற்றிகளுக்குக் காரணமாய் இருந்தார்.
ரவிச்சந்திரன் அஸ்வின் முறியடிக்கும் வரை இவரே இந்தியாவின் மிக வெற்றிகரமான ஆஃப்-ஸ்பின்னராக இருந்தார்.
மும்பை இந்தியன்ஸ்:
ஆரம்ப காலத்தில் மும்பை அணியின் தூணாக விளங்கி 3 முறை ஐபிஎல் கோப்பையை வெல்ல உதவினார்.
சில போட்டிகளுக்கு கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
தனது ஐபிஎல் பயணத்தின் இறுதிப் பகுதியில் கேகேஆர் (KKR) அணிக்காகவும் விளையாடினார்.
நாடாளுமன்ற உறுப்பினர்:
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, ஆம் ஆத்மி கட்சி (AAP) சார்பில் பஞ்சாபிலிருந்து ராஜ்யசபா எம்பியாக (MP) தேர்ந்தெடுக்கப்பட்டு அரசியல் பணியாற்றி வருகிறார்.
நல்லெண்ண தூதர்:
பிளவுபட்ட உதடு குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு உதவும் ஸ்மைல் ட்ரெயின் இந்தியா (Smile Train India) அமைப்பின் நல்லெண்ண தூதராகச் செயல்பட்டு வருகிறார்.
சினிமா மற்றும் கலைத்துறை தமிழ் ரசிகர்கள் மீது கொண்ட ஈர்ப்பால் சந்தானத்தின் டிTickiloona (டிகிலோனா) மற்றும் நட்புக்காக எடுக்கப்பட்ட Friendship (பிரண்ட்ஷிப்) ஆகிய தமிழ் திரைப்படங்களில் நடிகராகவும் முகம் காட்டியுள்ளார்.
Hindusthan Samachar / Durai.J