Enter your Email Address to subscribe to our newsletters

மும்பை , 03 ஜூலை (ஹி.ச.)
அயர்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரு ஆட்டங்களிலும் தோல்வி அடைந்து, 2–0 என்ற கணக்கில் தொடரை இழந்தது.
இதன்மூலம் இந்தியாவுக்கு எதிராக முதல் முறையாக டி20 தொடரை கைப்பற்றி அயர்லாந்து அணி புதிய வரலாறு படைத்தது. இந்தத் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்த இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு ஒரு போட்டியிலும் விளையாடும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இதையடுத்து இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் விளையாடி வருகிறது.
நடைபெற்ற முதல் டி20 போட்டி மழை காரணமாக பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது. அந்தப் போட்டியிலும் வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு அளிக்கப்படாதது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், முன்னாள் இந்திய வீரரும், முன்னாள் தலைமைப் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி, வைபவ் சூர்யவன்ஷிக்கு விரைவில் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
வைபவ் சூர்யவன்ஷி அயர்லாந்து தொடரில் விளையாடியிருக்க வேண்டும். அங்குள்ள ஆடுகளங்கள் மெதுவாகவும், பந்து குறைந்த உயரத்தில் எழும்பும் தன்மையுடனும் இருக்கும். மேலும், சிறிய மைதானங்கள் என்பதால் அவரது அதிரடி ஆட்டத்திற்கு மிகவும் ஏற்றதாக இருந்திருக்கும்.
அவர் எதிரணி பந்துவீச்சாளர்களை ஆதிக்கம் செலுத்தியிருப்பார்.
எனவே, அவருக்கு கூடிய விரைவில் இந்திய அணியில் விளையாட ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA