ரயில் நிலையத்தில் 'காதல் கோட்டை' ரீல்ஸ் எடுத்த தம்பதி மீது வழக்கு!
மதுரை, 03 ஜூலை (ஹி.ச.) மதுரை ரயில் நிலையத்திற்குள் நுழைந்த ஒரு இளம் ஜோடி, ''காதல் கோட்டை'' படத்தின் இறுதி காட்சியில் வரும் சூர்யா - கமலி கதாபாத்திரங்கள் போல நடித்தனர். படத்தில் அஜித் தன் பனியனில் வரைந்திருக்கும் ரோஜா பூவைக் காட்டி அடையாளம் சொல
Reels Kadhal Kottai


மதுரை, 03 ஜூலை (ஹி.ச.)

மதுரை ரயில் நிலையத்திற்குள் நுழைந்த ஒரு இளம் ஜோடி, 'காதல் கோட்டை' படத்தின் இறுதி காட்சியில் வரும் சூர்யா - கமலி கதாபாத்திரங்கள் போல நடித்தனர்.

படத்தில் அஜித் தன் பனியனில் வரைந்திருக்கும் ரோஜா பூவைக் காட்டி அடையாளம் சொல்வது போல, இந்த ஜோடியில் இருக்கும் இளைஞர் பனியனில் ரோஜாவுக்குப் பதிலாக வாகைப்பூவை வரைந்து காட்டி நடித்துள்ளார்.

பிளாட்பாரத்தில் ஓடுவது, ரயிலுக்குள் ஏறி இருக்கையில் அமர்ந்து தேடுவது எனப் பாதுகாப்பு மிகுந்த ரயில் நிலையத்தையே ஷூட்டிங் ஸ்பாட் போல மாற்றி வீடியோ எடுத்துள்ளனர்.

ரயில்வே நிர்வாகத்திடம் முறையான எந்தவொரு முன் அனுமதியும் பெறாமல் அவர்கள் இந்த வீடியோவை எடுத்துள்ளனர்.

நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் மதுரை சந்திப்பில், ஓடும் ரயிலுக்கு அருகே மற்றும் பிளாட்பாரத்தில் ஓடி வீடியோ எடுத்தது பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் இடையூறாகவும் பார்க்கப்பட்டது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, நெட்டிசன்கள் பலரும் ரயில் நிலையமா அல்லது ரீல்ஸ் நிலையமா? எனக் கேள்வி எழுப்பியதை அடுத்து, ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரயில்வே போலீசார் அந்த ஜோடி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN