Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 03 ஜூலை (ஹி.ச.)
கரூர் கூட்டநெரிசல் உயிரிழப்பு வழக்கு தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பொதுவெளியில் தெரிவித்த கருத்துகள் புலன் விசாரணையை பாதிக்கும் வகையில் உள்ளதாகக் கூறி, உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில், வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்த கருத்துகள் நீதித்துறை நடைமுறையில் தலையீடு செய்யும் வகையிலும், நீதிமன்ற அவமதிப்பாகவும் இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், கரூர் கூட்டநெரிசல் உயிரிழப்பு வழக்கு தொடர்பாக பொதுவெளியில் கருத்து தெரிவித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மீது மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
அத்துடன், சிபிஐ விசாரணை நிறைவடையும் வரை, இந்த வழக்குடன் தொடர்புடையதாகக் கூறப்படும் தமிழக முதலமைச்சர் விஜய், அமைச்சர்கள் உள்ளிட்ட எவரும் பொதுவெளியில் கருத்து தெரிவிக்கக் கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்றும் மனுதாரர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த மனு மீது உச்சநீதிமன்றம் எப்போது விசாரணை நடத்தும் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P