உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி - தமிழ்நாட்டில் இன்று 2 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாடு, 03 ஜூலை (ஹி.ச.) கோவை, நீலகிரியில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கணித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தெற்கு குஜராத்தில் இருந்து கர்நாடகா வரை காற்றழுத்த தாழ்வு பாதை
மழை


தமிழ்நாடு, 03 ஜூலை (ஹி.ச.)

கோவை, நீலகிரியில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கணித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

தெற்கு குஜராத்தில் இருந்து கர்நாடகா வரை காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மாவட்டங்களளில் இன்று கனமழையும், அதேபோல், கோவை, நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நாளையும் கனமழையும் பெய்யக் கூடுமென வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஜூன் 5 மற்றும் 6ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழையும், ஏனைய தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் லேசான மழையும் பெய்யக் கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் இரவில் நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழையும் பெய்யும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது.

அதேநேரம் சென்னையில் வெயிலின் தாக்கம் 98 டிகிரி பாரன்ஹீட்டுக்கு கீழ் குறையும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P