மத்திய அரசு திட்டங்கள் ஆய்வுக்கூட்டத்துக்கு அதிகாரிகள் யாரும் பங்கேற்க கூடாது - சு.வெங்கடேசன்
மதுரை, 03 ஜூலை (ஹி.ச.) மதுரை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு கண்காணிப்புகுழு கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தலைமையில் இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் அமைச்சர்கள் நிர்மல்குமார், விஸ்வநாதன், நாடாளுமன்ற
Su Venkatesan


மதுரை, 03 ஜூலை (ஹி.ச.)

மதுரை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு கண்காணிப்புகுழு கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தலைமையில் இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் அமைச்சர்கள் நிர்மல்குமார், விஸ்வநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் , மாநகர காவல் துணை ஆணையர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மாநகராட்சி ஆணையாளர், எம்.எல்.ஏக்கள் மதுரை மாவட்ட அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்

கூட்டத்தில் பேசிய சு.வெங்கடேசன்,

மத்திய அரசின் திட்டங்களை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு கண்காணிப்பு குழு கூட்டத்தின் தலைவராக நான் மற்றும் உறுப்பினர்களாக மத்திய அரசின் திட்டங்கள் குறித்து நாங்கள் மட்டுமே ஆய்வு செய்ய வேண்டும் சட்டத்தை மீறி யாரேனும் ஆய்வு செய்தால் அதில் பங்கேற்கும் அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பப்படும்

யாரும் இது போன்ற ஆய்வுக் கூட்டங்களில் பங்கேற்க கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் கூட்டத்தில் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN