Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 03 ஜூலை (ஹி.ச.)
மதுரை தீர்த்தக்காட்டை சேர்ந்த முத்துப்பாண்டியன் தேசிய தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின ஆணையத்தில் மின்னஞ்சல் வழியாக புகார் மனு அனுப்பியுள்ளார்.
அந்த புகார் மனுவில்,
மதுரை வண்டியூர் தீர்த்தக்காட்டில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் 45 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறார்கள்
1989 மற்றும் 1995 ல் 349 குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டு நிலம் வழங்குவதற்காக பட்டியல் வழங்கப்பட்டது, பல ஆண்டுகள் கடந்தாலும் மக்களுக்கு நிலங்கள் முழுமையாக வழங்கப்படவில்லை
நில உரிமை பெறுவதற்காக மக்கள் நீண்ட காலமாக காத்திருக்கிறார்கள், பெண்கள், குழந்தைகள் என பாதுகாப்பில்லாத நிலையில் வீடுகளில் வாழ்ந்து வருகிறார், மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யாதது அடிப்படை மனித உரிமைக்கு எதிரானது
தீர்த்தக்காட்டில் வசிக்கும் மக்களின் நிலை குறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின ஆணையம் நேரில் விசாரணை நடத்த வேண்டும், நீண்ட காலமாக போராடும் மக்களுக்கு ஆணையம் உரிய தீர்வை பெற்றுத் தர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது
இப்புகார் மனு தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் உரிய விளக்கம் அளிக்க வேண்டி தேசிய தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின ஆணையத்தின் இயக்குனர் ரவிவர்மன் மார்ச் 13 ல் முதல் நோட்டீஸ் அனுப்பியது,
மார்ச் 13 ஆம் தேதி முதல் முறையாக நோட்டீஸ் அனுப்பிய நிலையில் இரண்டாவது முறையாக ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
7 நாட்களுக்குள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN