Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 03 ஜூலை (ஹி.ச.)
மதுரை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு கண்காணிப்பு குழு கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தலைமையில் இன்று
(ஜூலை 3 ஆம் தேதி) மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.
இதில் அமைச்சர்கள் நிர்மல்குமார், விஸ்வநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மாநகராட்சி ஆணையாளர், எம்.எல்.ஏக்கள் மதுரை மாவட்ட அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர்
இக்கூட்டத்தில் மத்திய மாநில அரசுகளின் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
இந்த கூட்டத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் புகைப்படம் இன்றி தமிழக அரசு, மத்திய அரசின் இலச்சினை மட்டும் கூட்ட அறிவிப்பு பேனரில் வைக்கப்பட்டு உள்ளது.
இதனால் அதிகாரிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
Hindusthan Samachar / ANANDHAN