Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 03 ஜூலை (ஹி.ச)
தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நடைபெறும் முறைகேடுகள் தொடர்பாக, பொதுமக்கள் ஆதாரங்களுடன் புகார் அளிக்குமாறு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எஸ். ரமேஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
கோயில்களில் நடைபெறும் முறைகேடுகள், சட்டவிரோதமாக பணம் வசூலித்தல், திருக்கோயில்களின் திருப்பணிகளில் நடைபெறும் முறைகேடுகள், கோயில்களில் வேலைவாய்ப்பு வழங்குவதற்காக லஞ்சம் பெறுதல் உள்ளிட்ட குற்றச்செயல்கள் குறித்து தகுந்த விளக்கங்கள் மற்றும் ஆதாரங்களுடன் தனது தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு புகார்களை அனுப்பலாம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் மீது தானும், தனது அலுவலகமும் நேரடியாக ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுப்பதற்கான வழிவகைகளை மேற்கொள்ளும் என்றும் அமைச்சர் எஸ். ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இதற்காக, minister_hrce@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியை பொதுமக்கள் பயன்படுத்தலாம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ