நெல்லை இரட்டைக் கொலை,இன்னும் எத்தனை தலைகள் உருள வேண்டும்? – தமிழக அரசை விமர்சித்த நயினார் நாகேந்திரன்
நெல்லை, 03 ஜூலை (ஹி.ச.) நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே காளிமுத்து மற்றும் அவரது 5 வயது மகன் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, தமிழக அரசின் சட்டம்-ஒழுங்கு நிலையை விமர்சித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்
Nainar


Jj


நெல்லை, 03 ஜூலை (ஹி.ச.)

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே காளிமுத்து மற்றும் அவரது 5 வயது மகன் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, தமிழக அரசின் சட்டம்-ஒழுங்கு நிலையை விமர்சித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

நிர்வாகம் கற்றுக் கொள்வதற்குள் இன்னும் எத்தனை தலைகள் உருள வேண்டும் விஜய் அவர்களே? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், காளிமுத்துவையும் அவரது 5 வயது மகனையும் சிலர் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்து, காளிமுத்துவின் தலையை துண்டித்து எடுத்துச் சென்றதாக வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியளிப்பதாகவும், இந்த இரட்டைக் கொலை ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்பதற்கான அவலச் சான்று என்றும் தெரிவித்துள்ளார்.

பட்டப்பகலில் பொதுவெளியில் இதுபோன்ற கொடூரச் சம்பவங்கள் நடைபெறும் அளவுக்கு சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக குற்றம்சாட்டிய அவர், குற்றங்களைத் தடுக்கவும், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும், குற்றங்களை கட்டுப்படுத்தி, சட்டம்-ஒழுங்கை சீரமைக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ