40 ஆண்டுகளுக்கு பிறகு நியூசிலாந்து செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி
புதுடெல்லி , 03 ஜூலை (ஹி.ச.) பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரம் நியூசிலாந்துக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்ள உள்ளார். ஜூலை 10-ம் தேதி ஆக்லாந்து நகருக்கு செல்லும் அவர், அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று, ஜூலை 11-ம் தேதி இந்தியா திரும்புக
A


புதுடெல்லி , 03 ஜூலை (ஹி.ச.)

பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரம் நியூசிலாந்துக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்ள உள்ளார்.

ஜூலை 10-ம் தேதி ஆக்லாந்து நகருக்கு செல்லும் அவர், அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று, ஜூலை 11-ம் தேதி இந்தியா திரும்புகிறார்.

இந்தப் பயணத்தின் மூலம், கடந்த 40 ஆண்டுகளில் நியூசிலாந்துக்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெறுகிறார்.

இதற்கு முன்பு, 1986-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி நியூசிலாந்துக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டிருந்தார்.

பிரதமர் மோடியின் பயணம் குறித்து நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் முதல் அதிகாரப்பூர்வ நியூசிலாந்து பயணத்தை வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

உலகின் மிகப்பெரிய மற்றும் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் இந்தியா முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.

நியூசிலாந்தின் பொருளாதார வளர்ச்சியிலும் இந்தியாவின் பங்களிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் நியூசிலாந்துக்கு வருவது வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகும்.

பிரதமர் மோடியை நியூசிலாந்தில் வரவேற்க ஆவலுடன் உள்ளேன்.

இந்தப் பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு, வர்த்தகம், முதலீடு மற்றும் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA