தேர்தல் முறைகேடு குற்றச்சாட்டு - தலைமை நீதிபதிக்கும் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கும் 23 எதிர்க்கட்சிகள் கூட்டாக கடிதம்
புதுடெல்லி, 03 ஜூலை (ஹி.ச.) நாட்டில் தேர்தல் நடைமுறை, விசாரணை அமைப்புகளின் செயல்பாடு மற்றும் ஜனநாயக நிறுவனங்களின் சுதந்திரம் தொடர்பாக கவலை தெரிவித்து, பாஜகவுக்கு எதிரான 23 எதிர்க்கட்சிகள், இந்திய தலைமை நீதிபதி மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு க
உச்ச நீதிமன்றம்


புதுடெல்லி, 03 ஜூலை (ஹி.ச.)

நாட்டில் தேர்தல் நடைமுறை, விசாரணை அமைப்புகளின் செயல்பாடு மற்றும் ஜனநாயக நிறுவனங்களின் சுதந்திரம் தொடர்பாக கவலை தெரிவித்து, பாஜகவுக்கு எதிரான 23 எதிர்க்கட்சிகள், இந்திய தலைமை நீதிபதி மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு கூட்டாக கடிதம் எழுதியுள்ளன.

அந்தக் கடிதத்தில்,

பாஜகவுக்கு எதிராக செயல்படும் ஒரே சிந்தனையுடைய அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் நாங்கள், நாட்டின் தேர்தல் நடைமுறை முறைகேடாக கையாளப்படுவதாகவும், பல தேர்தல்களின் முடிவுகள் மக்களின் உண்மையான விருப்பத்தை பிரதிபலிப்பதில்லை என்றும் நம்புகிறோம் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், மத்திய அரசின் விசாரணை அமைப்புகளான மத்திய புலனாய்வு அமைப்பு (CBI), அமலாக்கத்துறை (ED), தேசிய புலனாய்வு முகமை (NIA) ஆகியவை எதிர்க்கட்சிகளை மட்டுமே குறிவைத்து பயன்படுத்தப்படுகின்றன.

அதோடு, தேர்தல் முடிவுகளைப் பாதிக்கவும், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை கவிழ்க்கவும் இந்த அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன என்பது மிகுந்த கவலைக்குரியது என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தொடர்ந்து, நிறுவனங்கள் தங்களது கடமையைச் சரியாக நிறைவேற்றத் தவறினால், ஜனநாயகம் குழப்பநிலைக்கு தள்ளப்படும்.

மக்களின் நிறுவனங்கள் மீதான நம்பிக்கை நிலைத்திருக்க வேண்டுமெனில், அந்த நிறுவனங்கள் தங்களது அரசியலமைப்புச் சட்டப் பொறுப்புகளை முறையாக நிறைவேற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதித்துறையை கேள்விக்குள்ளாக்கும் நோக்கம் தங்களுக்கு இல்லை என்றும், மற்ற அனைத்து அமைப்புகளும் தோல்வியடைந்தபோது நீதிமன்றங்களையே நாங்கள் நாடுகிறோம்.

நீதித்துறையும் தோல்வியடைந்தால், அதன் பிறகு யாரை நம்புவது என்ற கேள்வி எழுகிறது.

அந்தக் கேள்வியை தங்களது சிந்தனைக்கு விட்டுவைக்கிறோம் என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P