3 குழந்தைகளை கொன்று விட்டு இளம்பெண் தற்கொலை காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை
சண்டிகர் , 03 ஜூலை (ஹி.ச.) பஞ்சாப் மாநிலம் மன்சா பகுதியைச் சேர்ந்தவர் சந்தியா கவுர் (36). இவரது கணவர் சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்ததைத் தொடர்ந்து, தனது 3 குழந்தைகளுடன் தாயார் வீட்டில் தங்கி வசித்து வந்தார். இந்த நிலையில், நேற்று மாலை வீட்
A


சண்டிகர் , 03 ஜூலை (ஹி.ச.)

பஞ்சாப் மாநிலம் மன்சா பகுதியைச் சேர்ந்தவர் சந்தியா கவுர் (36).

இவரது கணவர் சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்ததைத் தொடர்ந்து, தனது 3 குழந்தைகளுடன் தாயார் வீட்டில் தங்கி வசித்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று மாலை வீட்டில் இருந்த தனது 3 குழந்தைகளையும் சந்தியா கவுர் கொன்றுவிட்டு, பின்னர் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஒரு குழந்தைக்கு விஷம் கொடுத்து கொன்ற அவர், மற்ற 2 குழந்தைகளையும் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக போலீசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், சம்பவ இடத்தில் இருந்து தடயங்களை சேகரித்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

குடும்பப் பிரச்சினை, மனஉளைச்சல் அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணை மற்றும் பிரேதப் பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே இந்த சம்பவத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA