Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 03 ஜூலை (ஹி.ச)
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே, புதுசுக்லாபுரத்தைச் சேர்ந்தவர் விவசாயி செல்வராஜ் (58) இவருக்கு சொந்தமான தோட்டம் செம்பட்டி - நிலக்கோட்டை செல்லும் சாலை ஓரத்தில் உள்ளது.
இவரது தோட்டத்தில் கோவங்காய் விவசாயம் செய்து உள்ளார். அதற்காக கம்பி பந்தல் அமைத்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கோவங்காய் நாற்று நடவு செய்து, தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளது.
இவரது தோட்டத்தில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் 350 கோவங்காய் நாற்றுகள் நடவு செய்துள்ளார்.
மேலும், இவரது தோட்டத்தில் ரூபாய் 4 லட்சம் செலவில் தரைதளம் தண்ணீர் தொட்டி அமைத்து, ஆழ்துளை கிணற்றிலிருந்து வரும் தண்ணீரை சேமித்து வைத்து, அந்த தண்ணீரை பயன்படுத்தி வெங்காயம், செண்டு மல்லி பூ உள்ளிட்ட விவசாயிகள் செய்துள்ளார்.
கிலோ ரூபாய் 40-க்கு விற்பனையாகி வரும் கோவங்காய் வரும் ஐந்து மாதங்களுக்கு மேல் அறுவடை செய்து சுமார் இரண்டு லட்சம் வரை லாபம் ஈட்டும் வகையில் இருந்த கோவங்காய் செடிகளை, மர்ம நபர்கள் சிலர் இரவு நேரத்தில் தோட்டத்தில் உள்ள பந்தலக்குள் புகுந்து கோவங்காய் செடிகளை வேரோடு பிடுங்கி சேதப்படுத்தி உள்ளனர்.
மேலும், தரை தளம் தண்ணீர் தொட்டியில் அமைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பைப்புகளை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து விவசாயி செல்வராஜ் செம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற செம்பட்டி காவல்துறையினர் கோவங்காய் செடிகளை வேரோடு பிடுங்கி சேதப்படுத்திய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN