Enter your Email Address to subscribe to our newsletters

கடலூர், 03 ஜூலை (ஹி.ச.)
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த குடுமியான்குப்பத்தில் பெட்டிக்கடை நடத்தி வரும் அருள்தாஸ் அதே பகுதியைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு அளித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி, நடந்த சம்பவத்தை தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து மாணவியின் பெற்றோர் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி பெட்டிக்கடைக்காரர் அருள்தாஸை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அருள்தாஸிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாணவிக்கு தேவையான மருத்துவ பரிசோதனை மற்றும் கவுன்சிலிங் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b