முன்னாள் எம்எல்ஏ சத்யா மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு - நீதிமன்ற விசாரணை ஜூலை 17-க்கு ஒத்திவைப்பு
சென்னை, 03 ஜூலை (ஹி.ச) வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், தி.நகர் தொகுதியின் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்யா என்ற சத்தியநாராயணன் மற்றும் அவரது மனைவி ஜெயசித்ரா ஆகியோர் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி
Sathya


சென்னை, 03 ஜூலை (ஹி.ச)

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், தி.நகர் தொகுதியின் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்யா என்ற சத்தியநாராயணன் மற்றும் அவரது மனைவி ஜெயசித்ரா ஆகியோர் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.

கடந்த 2016 முதல் 2021-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், வருமானத்திற்கு அதிகமாக ரூ.9 கோடியே 41 லட்சம் மதிப்பிலான சொத்துகளை சேர்த்ததாக சத்யா மற்றும் அவரது மனைவி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஆர். சண்முகசுந்தரம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சத்யா மற்றும் அவரது மனைவி ஜெயசித்ரா இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

வழக்கில் இதுவரை 130 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளதுடன், 132 ஆவணச் சான்றுகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி ஜெயசித்ரா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணையையும், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையையும் ஜூலை 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ஆர். சண்முகசுந்தரம் உத்தரவிட்டார்.

Hindusthan Samachar / P YUVARAJ