Enter your Email Address to subscribe to our newsletters

திருநெல்வேலி, 03 ஜூலை (ஹி.ச.)
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், திருநெல்வேலியில் அமைந்துள்ள ஒரு பொதுப் பல்கலைக்கழகம் ஆகும்.
தென் தமிழக மக்களின் உயர்கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக 1990 செப்டம்பர் 7 அன்று தமிழ்நாடு அரசால் இது தொடங்கப்பட்டது.
புகழ்பெற்ற தமிழறிஞரும், தமிழ்நாட்டின் மாநில வாழ்த்துப் பாடலான ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ பாடலை இயற்றியவருமான பேராசிரியர் பெ. சுந்தரம் பிள்ளை அவர்களின் நினைவாக இப்பல்கலைக்கழகத்திற்கு இப்பெயர் சூட்டப்பட்டது
அந்த வகையில் திருநெல்வேலியில் அமைந்துள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தற்காலிக உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான நேர்காணல் வரும் ஜூலை 7 மற்றும் 8 ஆகிய இரு தினங்களில் நடைபெற உள்ளது.
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துள்ள தகுதியான விண்ணப்பதாரர்கள் அனைவரும் தங்களது கல்வித் தகுதிக்கான அசல் சான்றிதழ்கள் மற்றும் அவற்றின் சுய சான்றொப்பமிட்ட நகல்களுடன் நேர்காணலில் தவறாது கலந்துகொள்ளுமாறு பல்கலைக்கழக நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
நேர்காணலுக்கு வரும் விண்ணப்பதாரர்கள் உரிய ஆவணங்கள் இன்றி வந்தால் அவர்கள் நேர்காணலில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நேர்காணல் நடைபெறும் இடம் மற்றும் நேரம் குறித்த விரிவான விவரங்களுக்கு பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b