Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 03 ஜூலை (ஹி.ச.)
தமிழகத்தில் செயல்பட்டு வரும் தாயுமானவர் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவதுடன், அதை விரிவுபடுத்தவும் முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது, 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என சுமார் 19 லட்சம் பயனாளிகளுக்கு தாயுமானவர் திட்டத்தின் கீழ் வீடுதோறும் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுடன் கைம்பெண்களையும் இத்திட்டத்தில் இணைத்து, அவர்களுக்கும் வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் வகையில் திட்டத்தை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக உணவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதுதொடர்பாக நேற்று முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற உணவுத்துறை ஆய்வுக் கூட்டத்தில், தாயுமானவர் திட்டத்தின் தற்போதைய செயல்பாடு, பயனாளிகள் எண்ணிக்கையை அதிகரிக்கும் நடவடிக்கைகள் மற்றும் திட்ட விரிவாக்கம் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக, கைம்பெண்களையும் தாயுமானவர் திட்டத்தின் பயனாளிகளாக இணைத்து, அவர்களுக்கும் வீடுதோறும் ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் செயல்பாட்டு ஏற்பாடுகளை உணவுத்துறை அதிகாரிகள் இறுதி செய்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Hindusthan Samachar / GOKILA arumugam