ஆட்டோ ஓட்டுநர் தீக்குளித்து உயிரிழந்த சோகம் - குடும்பத்திற்கு ரூ.6 லட்சம் நிதியுதவி, மனைவிக்கு அரசுப் பணி
நெல்லை, 03 ஜூலை (ஹி.ச) நெல்லை டவுன் பாறையடி ராஜாஜி நகர் பகுதியைச் சேர்ந்த வேல்முருகன். ( எ ) மாரியப்பன் ( வயது 30 ) வாடகைக்கு ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். கடந்த ஜூன் 28 தச்சநல்லூர் - டவுன் சாலையில் உள்ள குருநாதன் கோவில் திருப்பு முனை அருகே அவர் த
ஆட்டோ ஓட்டுநர் தீக்குளித்து உயிரிழந்த சோகம் - குடும்பத்திற்கு ரூ.6 லட்சம் நிதியுதவி, மனைவிக்கு அரசுப் பணி


நெல்லை, 03 ஜூலை (ஹி.ச)

நெல்லை டவுன் பாறையடி ராஜாஜி நகர் பகுதியைச் சேர்ந்த வேல்முருகன். ( எ ) மாரியப்பன் ( வயது 30 ) வாடகைக்கு ஆட்டோ ஓட்டி வந்துள்ளார்.

கடந்த ஜூன் 28 தச்சநல்லூர் - டவுன் சாலையில் உள்ள குருநாதன் கோவில் திருப்பு முனை அருகே அவர் தனது வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது , அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவலர்கள் அவரது ஆட்டோவை நிறுத்தி விசாரித்துள்ளனர்.

அவர் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டியதாக கூறி, மேலும் ஆட்டோவை இயக்க அனுமதிக்காமல் காவல் துறை தரப்பில் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் போலீசாருடன் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி அங்கிருந்த ஒரு பெண் காவலர் உட்பட 6 காவலர்கள் முன்னிலையில் தன் மீது பெட்ரோல் ஊற்றித் வேல்முருகன் தீ வைத்துக் கொண்டுள்ளார்.

சுமார் 79 சதவீதத்திற்கும் மேலாக உடல் கருகிய நிலையில், அவர் மீட்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்ட நிலையில் , சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆட்டோ ஓட்டுநரின் மரணம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

இந்தச் சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, உயிரிழந்த ஆட்டோ ஓட்டுநர் வேல்முருகனின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூபாய் 6 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வேல்முருகனின் மனைவிக்கு கருணை அடிப்படையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் இளநிலை உதவியாளர் பணிக்கான ஆணையும் வழங்கப்பட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்ட இந்த நிவாரணம் மற்றும் பணி நியமன ஆணையை அதிகாரிகள் நேரில் வழங்கினர்.

Hindusthan Samachar / vidya.b