Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 03 ஜூலை (ஹி.ச.)
கடந்த ஜூன் 20-ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வர் குறித்து அனிதா ராதாகிருஷ்ணன் பேசிய கருத்துகளைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அதில் தன்னை கைது செய்யக்கூடும் என்ற அச்சத்தால் அவர் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்,அதில் அவருக்கு முன் ஜாமின் ரத்து ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருந்த முன்னாள் அமைச்சரும் திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணனை போலீசார் இன்று கைது செய்தனர்.
அங்கிருந்து அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
கைது நடவடிக்கையையடுத்து அந்தப் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
கைது செய்யப்பட்ட அனிதா ராதாகிருஷ்ணன் மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என போலீஸ் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை சம்பந்தப்பட்ட போலீசார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam