Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 03 ஜூலை (ஹி.ச.)
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கைக்கு தமிழக வெற்றி கழகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து,தமிழக வெற்றி கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வாய் இருக்கிறது என்பதற்காக வரம்பு மீறிப் பேசுவதிலும், போலி தகவல்களை
(Fake Narrative) பரப்புவதிலும் திமுகவை யாராலும் மிஞ்ச முடியாது.
அதே போன்ற அவதூறு அரசியலையே ஸ்டாலின் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், சட்டமன்ற உறுப்பினரான அனிதா ராதாகிருஷ்ணன் பொறுப்பற்ற வகையில் பேசியது குறித்து உயர்நீதிமன்றம் தெரிவித்த கருத்துகளை திமுக கவனிக்கவில்லை.
திமுக பல ஆண்டுகளாக அவதூறு அரசியலை முன்னெடுத்து வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், எந்தத் தவறும் செய்யாத பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பலர் மீது வழக்குகள் பதிவு செய்து கைது செய்த திமுக, தற்போது ஜனநாயகத்தைப் பற்றி பேசுவது முரண்பாடானது.
சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் அரசை விமர்சிப்பது ஏற்கத்தக்கதல்ல என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், ஆட்சி அதிகாரத்தை இழந்த விரக்தியில் தமிழக அரசுக்கு எதிராக முன்னாள் அமைச்சர்களைத் தூண்டிவிட்டதாக திமுக மீது தவெக குற்றம்சாட்டியுள்ளது.
இறுதியாக, குதிரை பேரம் உள்ளிட்ட அரசியல் பேரங்களில் திமுக ஈடுபட்டு வருகிறது.
ஊழல் விவகாரங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில், மக்களை மீண்டும் ஏமாற்றும் முயற்சியில் திமுக ஈடுபடுகிறது.
அவதூறு அரசியல் மக்களிடம் எடுபடாது என்றும் தமிழக வெற்றி கழகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam