நீடாமங்கலம் அருகே காட்டுப்பன்றி தாக்குதல் - கூலித் தொழிலாளி படுகாயம்
திருவாரூர், 03 ஜூலை (ஹி.ச.) திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை (வயது 50) என்பவர் இன்று வழக்கம்போல வயல்வெளிக்கு வேலைக்குச் சென்றபோது, எதிர்பாராத விதமாக காட்டுப்பன்றி ஒன்று தாக்கியுள்ளது. காட்டுப்பன்றியின் தாக்குதல
நீடாமங்கலம் அருகே காட்டுப்பன்றி தாக்குதல் - கூலித் தொழிலாளி படுகாயம்


திருவாரூர், 03 ஜூலை (ஹி.ச.)

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை

(வயது 50) என்பவர் இன்று வழக்கம்போல வயல்வெளிக்கு வேலைக்குச் சென்றபோது, எதிர்பாராத விதமாக காட்டுப்பன்றி ஒன்று தாக்கியுள்ளது.

காட்டுப்பன்றியின் தாக்குதலில் கால் மற்றும் உடலின் பல பகுதிகளில் பலத்த காயம் அடைந்த அண்ணாதுரையை, அருகில் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்கள் அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இதனிடையே, பொதுமக்களை அச்சுறுத்தி வரும் அந்த காட்டுப்பன்றியை பிடிப்பதற்கான தேடுதல் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து வலங்கைமான் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீடாமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களில் சமீபகாலமாக காட்டுப்பன்றிகளின் நடமாட்டம் அதிகரித்து, பயிர்களை நாசம் செய்வதோடு மனிதர்களையும் தாக்கத் தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

எனவே, வனத்துறையினர் உடனடியாக தலையிட்டு காட்டுப்பன்றிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த கூண்டுகள் வைக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட தொழிலாளிக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Hindusthan Samachar / vidya.b